Murder [Imagesource : Indiatoday]
மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அருகே நெஞ்சக மருத்துவமனை அருகே புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணியில் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பீகாரை சேர்ந்த சுபாஷ் குமார் மற்றும் சுனில் ஆகிய இருவரும் உணவு தயார் செய்வதர்க்காக அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கிவிட்டு, மீண்டும் தங்கள் இருப்பிடத்திற்கு வந்துள்ளனர்.
தொடர்மழையால் நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரி..! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
அப்போது அந்த வழியாக வந்த மர்மநபர்கள் 3 பேர் வடமாநில தொழிலாளர்கள் இருவரையும் வழிமறித்து செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து வடமாநில தொழிலாளர் இருவரும் அவர்களை துரத்தி பிடித்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த மர்மநபர்கள் வைத்திருந்த கூர்மையான ஆயுதங்களால் வடமாநில தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். இதில் சுபாஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றோருவர் சுனில் பலத்த காயங்களுடன் அந்த இடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சுனிலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…