வடசென்னை அனல் மின் நிலையம்- மின் உற்பத்தி பாதிப்பு..!
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2-ம் நிலையின் 2 அலகுகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலையின் 2 அலகுகளிலும் சாம்பல் கையாளும் பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 1-வது அலகில் பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.