வாடகை கார்… அரசே எடுத்து நடத்தலாம்.! சென்னையில் ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்.!

இன்று சென்னையில் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வாடகை கார் ஓட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாடகை பைக் முறையால் , கார் ஓட்டுனர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் நிறுவனங்கள் அதிகம் கமிஷன் வசூல் செய்கின்றன இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைக்கின்றனர்.
இது தொடர்பாக, இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வாடகை கார் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களின் கீழ் வேலை செய்யும் ஓட்டுநர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் அவர்கள் கணக்கை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் நிறுத்தி விடுகின்றனர்.
தொடரும் தமிழக மீனவர்களின் கைது..! வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கிய ராமேஸ்வர மீனவர்கள்..!
அந்த தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கமிஷன் வசூல் செய்கின்றனர். ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு முறையில் கமிஷன் வசூல் செய்கிறார்கள். இதனை அரசு தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்.
இந்த வாடகை கார் செயலியை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். சொந்த பயன்பட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டுவதற்கு அனுமதிப்பது தவறு. இதனை தமிழக அமைச்சர் அவ்வபோது கூறினாலும், அவர்களை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக பல போராட்டங்கள் நடத்தினாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாடகை கார் மூலம் நாங்கள் 100 ரூபாய் சம்பாதித்தால் 30 ரூபாய் அந்த தனியார் நிறுவனங்களுக்கு சென்று விடுகிறது. 10 ரூபாய் தான் எங்களுக்கு வருகிறது. இதனை அரசே எடுத்து நடத்தினால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கிடைக்கும் வருவாயில், ஓட்டுனர்களுக்கு பி.எப் , இஎஸ்ஐ போன்ற சேவைகளையும் வழங்கலாம்.
இரு சக்கர வாகன வாடகையில் கார் போல லக்கேஜ் சார்ஜ் வரை வாங்குகின்றனர் என பல்வேறு குற்றசாட்டுகளை வாடகை கார் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர் . இந்த போராட்டமானது இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. நாளை திருச்சியில் இதே போல வாடகை கார் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?
February 25, 2025
பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!
February 25, 2025