முதல்வர், மற்றும் துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறதாகவும், யாராலும் எந்த சக்தியாலும் அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் இசைப்பள்ளி அமைக்கும் பணியின் தொடக்க விழா, நேற்று நடந்தது. அதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு இசை பள்ளி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், புதூர் ஊராட்சி நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் மாணவர் விடுதி அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் திரையரங்குகளுக்கு தற்பொழுது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி இருப்பதாக தெரிவித்தார்.
அப்பொழுது அவரிடம் செய்தியாளர் ஒருவர்
சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா? என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், முதல்வர், மற்றும் துணை முதல்வரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறதாகவும், அதிமுகவில் யாராலும், எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…