சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் . சில நாள்களுக்கு முன் கர்நாடக சிறைத்துறை நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை சிறையில் இருந்து சில மாதங்களில் விடுதலை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சசிகலாவை அதிமுகவில் இணைவது குறித்து பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர். அதில் அதிமுகவினர் சிலர் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்ள மாட்டோம் எனவும், சிலர் அதை பற்றி தலைமைதான் முடிவு செய்யும் என கூறி வருகின்றனர்.
அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை குறித்து சிறை நிர்வாகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிறை நிர்வாகம்,சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையாகிறார் என்று தெரிவித்துள்ளது. அபராதத்தொகை ரூ.10 கோடியை கட்டாவிடில் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று சிறை நிர்வாகம் பதில் தெரிவித்தது.
இதனிடையே தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றிற்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,இன்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவால் பதவி பெற்றவர்கள் என்று கூறினார்.இந்நிலையில் இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சசிகலாவால் நாங்கள் யாரும் அமைச்சராகவில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தான் அமைச்சர்களானோம் .வரலாறு தெரியாமல் பிரேமலதா எந்த அடிப்படையில் பேசினார் என்று தெரியாது.அவர்கள் கட்சி விவகாரம் குறித்து பேசுவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…