திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதமான நிபந்தனைகளையும் யாரும் முன்வைக்கவில்லை-திருநாவுக்கரசர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வரை அவமதிப்பது, மக்களை அவமதிப்பதற்கு சமம் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதமான நிபந்தனைகளையும் யாரும் முன்வைக்கவில்லை.கூட்டணி குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிவரும் கருத்துக்களை நகைச்சுவையாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வரை அவமதிப்பது, மக்களை அவமதிப்பதற்கு சமம் என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.