திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் பாலதண்டாயுதபாணி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. அந்த பலகையானது அங்குள்ள அதிகாரிகளால் முன்பு அகற்றப்பட்டது.
இதனை அடுத்து பழனியை சேர்ந்த ஒரு நபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்து அறநிலைத்துறை சட்டத்தின் படி, ‘இந்து அல்லாதவர்கள் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , வேறு மத கடவுளை வணங்குவோர்கள் கோவிலுக்குள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டு இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோவிலுக்குள் வருவதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது..!
கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு இந்து அல்லாதோர் பழனி முருகன் திருக்கோவிலுக்குள் வருவதை தடை விதித்த பலகையை மீண்டும் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. அதில், இந்து அல்லாதோர் பழனி முருகன் கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும், அதனையும் மீறி மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வர விரும்பினால் அதற்கான தனி வருகை பதிவேடு வைத்து அதில், மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி கையெழுத்திட்ட பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என கட்டுப்பாடுகளை விதிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…