இந்து அல்லாதோருக்கு பழனி முருகன் கோயிலில் தடை.? மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Palani Murugan Temple - Madurai high court

திண்டுக்கல் மாவட்டம் பழனிமலையில் பாலதண்டாயுதபாணி (முருகன்) கோவில் உள்ளது. இந்த கோயிலில் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது. அந்த பலகையானது அங்குள்ள அதிகாரிகளால் முன்பு அகற்றப்பட்டது.

இதனை அடுத்து பழனியை சேர்ந்த ஒரு நபர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் இந்து அறநிலைத்துறை சட்டத்தின் படி, ‘இந்து அல்லாதவர்கள் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் , வேறு மத கடவுளை வணங்குவோர்கள் கோவிலுக்குள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டு இந்து அல்லாதவர்கள் பழனி முருகன் கோவிலுக்குள் வருவதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது..!

கடந்த ஜூலை மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு இந்து அல்லாதோர் பழனி முருகன் திருக்கோவிலுக்குள் வருவதை தடை விதித்த பலகையை மீண்டும் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து தமிழக அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து  இன்று முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது. அதில், இந்து அல்லாதோர் பழனி முருகன் கோவில் கொடிமரம் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும், அதனையும் மீறி மாற்று மதத்தினர் கோவிலுக்குள் வர விரும்பினால் அதற்கான தனி வருகை பதிவேடு வைத்து அதில், மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உறுதிமொழி கையெழுத்திட்ட பின்னர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படலாம் என கட்டுப்பாடுகளை விதிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்