களைகட்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! களத்திற்கு தயாரான திமுக vs நாதக!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் பெரும் பணி கடந்த ஜனவரி 10 முதல் தொடங்கப்பட்டது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. நேற்று கடைசி நாளில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரசேகர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் என மொத்தம் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை அடுத்து திமுக வேட்பாளர் வி.சி.சந்திரசேகரின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது என தகவல் வெளியானது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரதான எதிர்கட்சி அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், புதியதாக தொடங்கிய தவெக கட்சி வரை பெரும்பாலான கட்சிகள் போட்டியிடவில்லை. இதனால் பெரும்பாலும் ஆளும் திமுக வேட்பாளர் வெற்றி பெரும் நிலை உள்ளது. அதற்கடுத்து பிரதான கட்சியாக எதிர்பார்க்கப்படுவது நாம் தமிழர் கட்சி.
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது பிரதான கட்சி வேட்பாளர்களாக பார்க்கப்படுவது திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோர் உள்ளனர்.