நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

Published by
பாலா கலியமூர்த்தி

Nomination: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்தவகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 20ம் தேதி தொடங்கிய நிலையில், நட்சத்திர வேட்பாளர்கள், சுயட்சைகள் என பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது.

கடைசி நாளில் மனு தாக்கல் செய்ய பலரும் வந்ததால் 3 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வாழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பின்னரும் வேட்புமனு வழங்க அனுமதிக்கப்படுவர். நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் முக்கிய வேட்பாளர்கள் உள்பட பலரும் போட்டிபோட்டு வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்தனர்.

எனவே, நாளை வேட்புமனு பரிசீலினை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற மார்ச் 30 கடைசி தேதியாகும்.  தமிழகம் முழுவதும் சற்று முன்பு வரை 834 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை 700க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

Recent Posts

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

39 minutes ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

2 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

2 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

3 hours ago

அப்போ தோனி., இப்போ ரோஹித்! பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…

3 hours ago

ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!

ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…

3 hours ago