சுபஸ்ரீக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது-உதயநிதி ஸ்டாலின்
சுபஸ்ரீக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது என்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீ-ன் வீட்டிற்கு சென்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின்னர் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அவர் கூறுகையில்,சுபஸ்ரீக்கு நிகழ்ந்தது போல் வேறு யாருக்கும் நடந்து விட கூடாது.பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.