அதிமுகவை யாராலும் உடைக்க முடியாது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளினை அடுத்து இன்று அவரது உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டது. அதனை திறந்து வைத்த முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது முதல்வர் பேசுகையில், “திமுக என்ற எஃகு கோட்டையை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் உருவாக்கினர். இந்த ஆட்சியை உடைக்க வேண்டும், கவிழ்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அதெல்லாம் பகல் கனவு. அம்மா ஆசி இருக்கும் வரை ஆட்சியை தொட்டு கூட பார்க்க முடியாது. நமது தொண்டர்கள் சிப்பாயாக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், “ஜெயலலிதா மறைந்ததும் திசை தெரியாத கப்பல் போல் தவித்தோம். ஆனால் அவர்கள் அளித்த பயிற்சியே நம்மை பாதுகாத்தது. எனவே 100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக அழியாது” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…