எம்.ஆர்.ஆர் சிலையை யாரும் உடைக்கவில்லை -மாவட்ட ஆட்சியர் விளக்கம்..!

எம்ஜிஆர் சிலையை யாரும் திட்டமிட்டு உடைக்கவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
நேற்று காலை திருச்சி மரக்கடையில் இருந்த எம்.ஜி.ஆர்.சிலையின் வலது கை மணிக்கட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இந்த தகவல் அதிமுகவினரிடையே வேகமாக பரவ , இதையடுத்து ஏராளமான தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதில், திருச்சியில் எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தது விஷமிகள் அல்ல; அதிகாரிகள் கவனக்குறைவே சிலை உடைய காரணம் என அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தது சிலையை திறந்த போது அதிகாரிகளின் கவனக்குறைவால் உடைந்தது. சிசிடிவி காட்சி ஆய்வு செய்ததில் எம்ஜிஆர் சிலையை விஷமிகள் உடைக்கவில்லை என தெரியவந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025