30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு – கேப்டனுக்கு நெகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறிய சரத்குமார்.!

அருமை நண்பர் மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் – சரத்குமார் ட்வீட்
தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 68-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் முதல்வர் பழனிசாமி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டவர்களை தொடர்ந்து தற்போது சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத்குமார் ட்விட்டர் பக்கத்தில், இன்பத்தில் மனநிறைவையும், துன்பத்தில் ஆறுதலையும் பகிர்ந்து கொண்டு 30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு. அருமை நண்பர் மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இன்பத்தில் மனநிறைவையும், துன்பத்தில் ஆறுதலையும் பகிர்ந்து கொண்டு 30 ஆண்டுகளாக தொடரும் உன்னத நட்பு. அருமை நண்பர் மற்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் @iVijayakant அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். #HBDVijayakanth pic.twitter.com/dl73AJD4PE
— R Sarath Kumar (@realsarathkumar) August 25, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025