பொய்கள் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் -முதலமைச்சர் பழனிச்சாமி

பொய்கள் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.
அதேபோல் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவில்பட்டியில் தமிழிசைக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,கொடநாடு வழக்கில் என் பெயரை சேர்க்க திமுக சதி செய்து வருகிறது. கூலிப்படையினரை ஜாமினில் எடுத்தது திமுக.மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால்தான் மாநிலங்களுக்கான திட்டங்கள் கிடைக்கும். பொய்கள் பேசுவதற்காகவே ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024