தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.
இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.மேலும் 15000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைத்து கொள்ள விண்ணப்பித்துள்ளது.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே முதல் அமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பிடு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு தொகையில் மத்திய அரசு 60 % மற்றும் தமிழக அரசு 40 % செலவையும் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஜார்கண்டை தொடர்ந்து பிற மாநிலங்களில் படிப்படியாக தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில் , ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,நாட்டில் எதிர் கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் அமைதியாக இருக்கிறாரே.அதற்கு வேண்டுமானால் நோபல் பரிசு விருதுக்கு பரிந்துரைக்கலாம் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…