வாயை திறக்காத மோடி ..!பேசாமல் இருப்பதற்கு நோபல் பரிசு வழங்கலாம் ..!இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி

Default Image

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்  பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.

இந்த காப்பீடு திட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசு ஏற்கும். இத்திட்டத்தின் கீழ் 50 கோடி குடும்பங்கள் பயன்பெறும்.இத்திட்டம் மூலமாக அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.மேலும் 15000-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைத்து கொள்ள விண்ணப்பித்துள்ளது.மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் ஏற்கனவே முதல் அமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பிடு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட உள்ளது. மருத்துவ காப்பீட்டு தொகையில் மத்திய அரசு 60 % மற்றும் தமிழக அரசு 40 % செலவையும் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் ஜார்கண்டை தொடர்ந்து பிற மாநிலங்களில் படிப்படியாக தொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for modi nobel peace prize

 

இந்த திட்டம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில் , ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு தேர்வு செய்ய என்னுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும்  என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Image result for Mohamed Shibli

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துக்கு  இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச் செயலாளர் முகம்மது ஷிப்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,நாட்டில் எதிர் கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வரும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பிரதமர் அமைதியாக இருக்கிறாரே.அதற்கு வேண்டுமானால் நோபல் பரிசு விருதுக்கு பரிந்துரைக்கலாம் என்று அவர் பதில் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்