மக்களை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை – கே.பாலகிருஷ்ணன்
உணர்ச்சித் தூண்டல் அரசியலே போதும் என்ற மிதப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது என கே.பாலகிருஷ்ணன் ட்வீட்.
ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதற்க்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும்.
ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் மக்கள் தவிப்பில் உள்ளார்கள். இப்போது அரசு மென்மேலும் புதிய சுமையை சுமத்துகிறது. மக்களை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. உணர்ச்சித் தூண்டல் அரசியலே போதும் என்ற மிதப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது.
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ! என்ற பாரதிதாசன் கவிதை வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.’ என பதிவிட்டுள்ளார்.
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!என்ற பாரதிதாசன் கவிதை வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
— கே.பாலகிருஷ்ணன் – K Balakrishnan (@kbcpim) September 30, 2022