அனைவருக்கும் ஹெலிகாப்டர் கொடுப்பேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை…! – மு.க.ஸ்டாலின்
ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டர் வாங்கி தருவேன் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் இருந்து எனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளேன்.
அதிமுக-பாஜக கூட்டணியால் பாழ்பட்டு போன தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற துடிப்பு ஆர்ப்பரிக்கும் மக்களின் ஒவ்வொருவருடைய குரலிலும் எதிரொலிக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து விட்டதால் தான் ,தேர்தல் அறிக்கையில் பழனிசாமி வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். இவர் ஒவ்வொருவருக்கும் ஹெலிகாப்டர் வாங்கி தருவேன் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.