தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி முகாம் நடைப்பெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க பல நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. தற்போது, கொரோனா தொற்றை குறைக்க தடுப்பூசி செலுத்தும் பணியில் அதிக கவனத்தை சென்னை மாநகராட்சி செலுத்தி வருகிறது.
சென்னையில் 40-க்கும் மேற்ப்பட்ட மையங்களில் மக்களுக்கு கொரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை சென்னையில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி முகாம் நடைப்பெறாது என சென்னை மாநகராட்சி இணையதளத்தில் அறிவித்துள்ளது.
தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் சென்னையில் இன்று முகாம்கள் கிடையாது. தடுப்பூசி முகாம்கள் மீண்டும் தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…