ஆவின் பாலில் நச்சுத் தன்மை இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
ஆவின் பாலில் நச்சுத் தன்மை இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே மக்களவையில் கூறுகையில், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அப்ஃளாடாக்ஷின் எம்1 ( Aflatoxin M1 ) எனும் நச்சுத்தன்மை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.மேலும் தமிழகம், கேரளா, டெல்லி என மூன்று மாநில பால்களில் தான் நச்சுத்தன்மை அதிகம் எனவும், அதில் தமிழகமே பால் நச்சுத்தன்மையில் முதலிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஆவின் பாலில் நச்சுத் தன்மை இல்லை.தனியார் பாலில் இருக்கிறதா என அரசு ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.