சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாநகராட்சிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மதுகடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுகடைகளை திறக்க அனுமதி அளிக்காத சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு சென்னைவாசிகள் சென்று மது வாங்கக்கூடாது எனவும், மது வாங்க செல்பவர்கள் அவர்கள் வசிக்கும் இடமருகே மட்டுமே மது வாங்க அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…