திருச்சி ரயில் நிலையத்தில் தமிழ் இல்லை! பொதுமக்கள் அவதி!
தமிழகத்தை பொறுத்தவரையில், ரயில் வழியாக பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ரயில் பயணம், பேருந்தில் பயணம் செய்வதை விட கட்டணம் குறைவாக இருப்பதால் அதிகமானோர் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர்.
இந்நிலையில், திருச்சி ரயில் நிலையத்தில், முன்பதிவு செய்யக்கூடிய விண்ணப்ப படிவத்தில் தமிழ் இல்லாமல், ஆங்கில, இந்தி, மலையாளம் மட்டுமே இருப்பதால், இதுகுறித்து மக்கள் புகாரளித்துள்ளனர்.
மேலும், முன்பதிவு சிரமமாக இருப்பதாகவும், வஞ்சிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி, விண்ணப்பத்தில் தமிழை சேர்க்குமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.