தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை.! முதல்வர்.!
சென்னை நகரம் மக்கள் அதிகமாக வாழும் நகரம் என்பதால் தொற்று எளிதில் பரவுகிறது என முதல்வர் தெரிவித்தார்.
சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்த பாலம் குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஈரடுக்கு பாலத்தை திறந்து வைத்து கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
ஈரடுக்கு பாலத்தை திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், கொரோனாவால் ஏற்படும் இழப்புகளை அரசு மறைக்கவில்லை. தினந்தோறும் அனைத்து விபரங்கள் வெளிப்படையாக அரசு அறிவிக்கிறது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை நகரம் மக்கள் அதிகமாக வாழும் நகரம் என்பதால் தொற்று எளிதில் பரவுகிறது மேலும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என தெரிவித்தார்.