அதிமுக கொடியை தொண்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் காரில் அதிமுக கொடி இடம்பெற்றது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.தமிழக டிஜிபியிடம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அதிமுக மூத்த நிர்வாகிகள் புகார் அளித்தனர்.வருகின்ற 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வரும்போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி புகாரில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,சசிகலா மீண்டும் கொடியை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளோம்.சசிகலா அதிமுக உறுப்பினார் இல்லை.உறுப்பினராக இல்லாதவரை எதற்காக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அவர் கொடியை பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை.அதிமுக கொடியை தலைவர்கள் ,தொண்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…