டெங்கு காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை-அமைச்சர் விஜயபாஸ்கர்
டெங்கு காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு பிரத்யேக வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,டெங்கு காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை.காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் பயப்படாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.
டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 71 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டதில் 9 பேருக்கு டெங்கு அறிகுறி காணப்படுகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.