மதுவிலக்கு என வாக்குறுதி அளிக்கவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி
மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு 88 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, பூர்ண மதுவிலக்கு என்றோ, மதுக்கடைகளை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்கவில்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் மதுக்கடைகள் குறைவாக உள்ளது. கோயில், பள்ளி, கல்லூரி அருகே உள்ள மதுக்கடைகள் கணக்கெடுக்கப்பட்டு 88 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பேசிய அமைச்சர், அதிமுகவினர் தோல்வியின் விரத்தியில் பேசுகிறார்கள், அவர்கள் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல. தேர்தல் பணி அலுவலகங்கள் அனைத்து அனுமதி பெற்றே போடப்பட்டுள்ளன என குறிப்பிட்டார். மேலும், திமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதி ஏராளமான வளர்ச்சிகளை கண்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி ஒரு மணிமகுடமாக இருக்கும் என்றும் திமுக காங்கிரஸ் மகத்தான வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.