எந்த தொழிலும் கீழானது இல்லை – கமல்ஹாசன்
எந்த தொழிலும் கீழானது இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
பரமக்குடியில் தனது தந்தையின் சிலையை திறந்துவைத்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வருவதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை.போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என பலருக்கு தெரியும் .
துப்புரவுப் பணிக்கு பி.ஹெச்.டி படித்தவர்கள் விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. வேலைக்காக இங்குள்ளவர்கள் இடம்பெயர்ந்து செல்ல கூடாது.நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் வேலை பார்த்திருக்கிறேன், எந்த தொழிலும் கீழானது இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
தொழிலாளியாக இல்லாமல் வேலை தருபவராக மாற வேண்டும். பல தொழில்களுக்கு வேலையாட்கள் இல்லை என்ற நிலையும் இருக்கிறது என்று பேசினார்.