அரசியல் தலையீடு இல்லை.., யாரும் அச்சப்பட தேவையில்லை – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு வழக்கில் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக, ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு, தற்போது மீண்டும் புதிதாக வந்து இருக்கக்கூடிய அரசு கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் அதிமுகவினரின் போக்கு உள்ளது என பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என ஏற்கனவே, தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நீதிமன்றம் அனுமதி பெற்று தான் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆகவே, இது தனிப்பட்ட அரசியல் தலையீடோ, நோக்கமும் அல்ல, பழிவாங்குற எண்ணமோ நிச்சயம் இல்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர, வேறு யாரும் இதற்கு பயந்து அச்சப்பட தேவையில்லை.

இந்த அரசு நிச்சயம் சட்டத்தின் ஆட்சியை நடத்தும். கோடநாடு வழக்கு தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்று வரும் விசாரணையை எதிர்க்கட்சி தலைவர் களங்கம் சுமத்தியுள்ளதால், அது இல்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக தான் இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை தான் தற்போது நிறைவேற்றி வருகிறோம். இன்னும் பல இருக்கிறது. இதனை பாமக தலைவர் ஜிகே மணி, பாஜக நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

49 minutes ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

1 hour ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

2 hours ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

2 hours ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

2 hours ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

3 hours ago