திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை – எஸ்பி வேலுமணி
கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்க வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பேட்டி.
கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த திட்டமும் வரவில்லை. நாங்கள் இருந்தபொது பணிகள் வேகமாக நடந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பணிகள் பொறுமையாக நடப்பதாகவும் குற்றசாட்டினார்.
கோவைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் கோவையில் நடக்கும். குறைபாடுகளை உணர்த்தவே இந்த போராட்டம். எடப்பாடி பழனிச்சாமி போராட்டதை துவக்கி வைக்க வருகிறார். கடந்த ஒன்றரை வருடமாக ஒன்றும் செய்யவில்லை, இனியாவது கோவை மாவட்டத்துக்கு செய்யுங்கள் என தெரிவித்தார்.
கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்க வேண்டாம். கோவையில் அதிமுக ஆட்சியில் சாலைகள் விரிவுபடுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்தோம். தற்போது, கொசு மருந்து கூட அடிப்பதியிலை, அரசு மருத்துவமனைக்கு சென்றால் சரியான சிகிச்சை மற்றும் மருந்து இல்லை, எந்த மருத்துவமனையிலாவது மருந்துகள் இருக்கிறதா? விஷக்கடி, காய்ச்சலுக்கு மருந்துகள் இல்லை என குற்றசாட்டினார்.
மேலும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை தூக்கி எறிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். விளம்பரத்தில் மட்டும் ஓடுகின்ற ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி தான். கொரோனாவால் எத்தனை உயிர்கள் போனது திமுக ஆட்சியில்? அதிமுக ஆட்சிக்கு வந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்றார்.