செஸ் ஒலிம்பியாட்டில் பிரதமர் மோடி புகைப்படம் இல்லை.! உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு.!
செஸ் ஒலிம்பியாட் விளம்பர புகைப்படங்களில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை என மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியுள்ள்ளது. இதில், கலந்துகொள்ள போட்டியாளர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
இந்த போட்டி தமிழகத்தில் நடைபெறுவதால், செஸ் ஒலிம்பியாட் போட்டியை விளம்பரப்படுத்த தமிழக அரசு சார்பில் விளம்பரப்படுத்தபட்டது.
அதில் பெரும்பாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் தான் இடம்பெற்று இருந்தது. அதனால், பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை ஸ்டிக்கர் மூலம் விளம்பர பலகைகளில் ஒட்டபட்டது.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பர புகைப்படங்களில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. என பொதுநல வழக்கு ராஜேஸ் கண்ணா என்பவர் தொடுத்து உள்ளார். இதனை வழக்கறிஞர் சண்முகநாதன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை மதியம் விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.