தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். தற்போது, மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னும் சற்றுநேரத்தில் தீவு திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்லும் கேப்டன் விஜயகாந்தின் உடல், மாலை 4 மணிக்கு மேல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அவரது இறுதி சடங்கை காண பெரிய எல்.ஈ.டி. திரைகள் ஆங்காங்கே வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆம், தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை விஜயகாந்த் உடல் 72 துப்பாகி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தேமுதிக அலுவலகம் காவல்துறையின் 3 அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிச்சீட்டு வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்ள் உட்பட 200 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேப்டன் விஜயகாந்த் இறுதி ஊர்வலம் செல்லும் பாதை.!
இதனால், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், தேமுதிக அலுவலகம் அருகே கூடியிருக்கும் பொதுமக்கள் கலைந்து செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு பாதுகாப்பு பணியில் 3,000 போலீசார் உள்ளனர். அதேபோல், தேமுதிக அலுவலகத்தில் 2,000 போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…