#BreakingNews : ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published by
Venu

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கிடையாது என்று  உயர்நீதிமன்றம்   தீர்ப்பு அளித்துள்ளது.

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது . துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் ஆலையை மீண்டும் இயக்க தீர்ப்பாயம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்தது.

நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் ஆலையை திறக்க டிசம்பர் மாதம் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில் வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம்  உயர்நீதிமன்றத்தில் வேதா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து, வேதாந்த நிறுவனம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்பொழுது ஸ்டெர்லைட் அலையை திறக்க திறக்க அனுமதியில்லை  என்று  சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .மேலும்  வழக்கினை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

8 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

11 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

31 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

55 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago