தமிழக அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழக அரசை குறை சொல்ல எந்த கட்சிக்கும் அருகதை கிடையாது. 7 பேர் விடுதலையில் முதலில் முயற்சி எடுத்தது ஜெயலலிதா தான். ஆனால் இன்று நீலி கண்ணீர் வடிப்பவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆளுனர் இதுகுறித்து நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில் ,ஸ்டாலின் முதலில் அவர் பணியை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதல்வர் நல்ல முதலீட்டுடன் திரும்பி வருவார். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் பொறாமையுடன் இதுகுறித்து பேசி வருகிறார்.
ஒரு பெண்மணியாக இருக்கின்ற தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானாவின் முதல் கவர்னர் மற்றும் பெண் கவர்னராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ் மொழியில் தீர்ப்பு மொழிமாற்றம் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…