நோ பார்க்கிங் விவகாரம்: காவலாளியை தாக்கிய விவகாரத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது…!
மாமல்லபுரத்தில்"நோ பார்க்கிங்" பகுதியில் காரை நிறுத்தக்கூடாது என தடுத்த காவலாளி தாக்கப்பட்ட சம்பவத்தில் 2 பெண்கள் 1 ஆண்கள் உட்பட 3 பேர் கைது
சென்னை : மாமல்லபுரத்தில் “நோ பார்க்கிங்” போட்டிருக்கும் இடத்தில் காரை நிறுத்தக்கூடாது எனக் காவலாளர் ஒருவர் கூறியதற்கு, அந்த பகுதியில் காரில் வந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 4 பேரும் சேர்ந்து காவலரைக் கடுமையாகத் தாக்கினார்கள்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் உடனடியாக கைது செய்யவேண்டும் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில், “நோ பார்க்கிங்” மட்டும் காவலர் சொன்னார். மற்றபடி அவர் எந்த விஷயமும் பேசவில்லை.
ஆனால், பேசிக்கொண்டே இருக்கும்போது காரில் இருந்து வேகமாக இறங்கிய பெண் காவலரைக் கண்ணத்தில் அறைந்தார். பிறகு அவருடன் காரில் வந்தவர்களும் கீழே இறங்கி மொத்தமாகத் தாக்கினார்கள். எனவே, காவலர் மீது எந்த தப்பு இல்லாத காரணத்தால், இந்த சம்பவத்தில் தாக்கியவர்களுக்கு எதிராகப் புகார்கள் எழுந்து அவர்கள் தற்போது கைதும் ஆகி இருக்கிறார்கள்.
முன்னதாகவே, வீடியோ காட்சிகளை வைத்து, அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் வேலைகளை காவல்துறையினர் தொடங்கி இருந்தார்கள். அதுமட்டுமின்றி, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சூழலில், காவலரைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட பிரபுதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியபோது தெரிய வந்துள்ளது. இவர்கள், முடிச்சுரை தேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இன்னும் ஒருவரை காவல்துறையினர் தேடியும் வருகிறார்கள்.