“அதிமுக – பாஜக கூட்டணி குறித்து கருத்து இல்லை” – பிரேமலதா விஜயகாந்த்.!
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபட்ட நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றைய தினம் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதை தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணியை திமுக, விசிக, தவெக என பல்வேறு கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாஜக கூட்டணிகட்ட ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, எங்களிடம் யாரும் ஆலே ஆலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பதில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், ”அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. அடுத்த 6 மாதங்களுக்கு தேமுதிகவை வலுப்படுத்தும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் தேமுதிகவின் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியை நோக்கியே இருக்கும்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக நிதானமாக யோசித்து தேமுதிக முடிவு எடுக்கும். மேலும், வரும் 30-ஆம் தேதி தருமபுரியில் நடக்கவுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.