எனது பிறந்தநாளன்று யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வரும் 25-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளன்று யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நண்பர்கள் உள்பட யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவர்களின் சீரிய முயற்சியால் கொரோனா நோய் தற்போது தமிழ்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கொரோனா நடைமுறைகளை பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேலும் என்னை வாழ்த்தி டிஜிட்டல் பேனர்கள், சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பரம் செய்வதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…