‘நீதிமன்ற பணி கேட்டு யாரும் வர வேண்டாம்’ – வீட்டு வாசலில் போஸ்டர் ஒட்டிய அமைச்சர் ரகுபதி…!
நீதிமன்ற பணி கேட்டு யாரும் வர வேண்டாம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வீட்டின் முன் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றங்களில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வானது உயர்நீதிமன்றம் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.
இதனையடுத்து தேர்வு முடிந்தபின் சிலர் அமைச்சர்களிடம் சிபாரிசு கேட்டு பணியில் சேர்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் தனது வீட்டில் நீதிமன்ற வேலைக்காக யாரும் என்னிடம் வர வேண்டாம் என்றும், பணி நியமனம் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகிறது என்றும் தனது வீட்டின் முன் போஸ்டர் சாட்டியுள்ளார்.