இந்த நேரத்தில் யாரும் வெளியே வரவேண்டாம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
ஆம்பன் புயல், தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் கொழுத்தி வந்துள்ளது. மேலும், 3 நாட்களில் அனல்காற்று வீசுவதால், யாரும் வெளியே வரவேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நேற்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதமடித்தது. மேலும், மன்னர் வளைகுடா பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், இன்னும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த அனல் காற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை அனல் காற்று வீசுவதால், இந்த நேரங்களில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.