‘யாரையும் சும்மா விடக் கூடாது’ – கோவை மாணவி தற்கொலை..! ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..!

Published by
லீனா

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி, ஆசிரியரின் பாலியல் தொந்தரவால் தூக்கிட்டு தற்கொலை .

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு வரை படித்திருந்தார். இதனை அடுத்து இவர் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் உக்கடம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு,  கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது தான் மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது.

ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவி வீட்டில் சொல்லி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்த விசயம் வெளியே தெரிந்தால் பள்ளி பெயர் கெட்டுவிடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், எனவே சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது பெற்றோரும் உறவினரும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், ‘யாரையும் சும்மா விடக்கூடாது. ரீத்தா ஓட தாத்தா, எலிசா சாரோட அப்பா, இந்த சார் யாரையும் விடக் கூடாது என்று எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு நேர்ந்த கொடுமை வேறு எந்த மாணவிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று கதறி அழுதுள்ளனர்.

மேலும், தங்கள் மகளின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி,  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்த நிலையில், தலைமைறைவாக இருந்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ என 2 பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

2026 தேர்தலில் திமுகவிடம் 25 தொகுதிகள் கேட்க திட்டமா? திருமாவளவன் பதில்

கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…

11 minutes ago

தேர்தல் விதிகள் திருத்தம் : பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் எதிர்க்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…

28 minutes ago

அல்லு அர்ஜுன் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேருக்கு ஜாமீன்.. பின்னணியில் ரேவந்த் ரெட்டி?

தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…

2 hours ago

சிறப்பு நீட் கலந்தாய்வு., ‘கெடு’ விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…

2 hours ago

‘மகாராணி’ ஸ்மிருதி மந்தனா… மகளிர் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சாதனை.!

குஜராத்: ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா…

3 hours ago

மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதியா? அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி!

சென்னை : தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றும், தேசிய மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால்…

3 hours ago