பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற செயல்களில் நாளை யாரும் ஈடுபடக்கூடாது -ஓ.பி.எஸ், இ.பி.எஸ்

Default Image

பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை.

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையன்று (நாளை) பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது மற்றும் ஊர்வலம் போன்றவைகள் நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. வாக்கு எண்ணிக்கையின் போது தொண்டர்களை, தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுயிருந்தது.

இந்த நிலையில், பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போன்ற செயல்களில் நாளை யாரும் ஈடுபடக்கூடாது என முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் அனைவரும் பாதுகாப்புடன் செயல்படுவது இன்றியமையாதது, அது சமூகத்திற்கு நாம் ஆற்றவேண்டிய கடமையும் ஆகும்.

வாக்கு எண்ணிக்கையின் போதும், முடிவுகள் வெளியாகும் வேளையிலும், அரசியல் கட்சியினரும், போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் எவ்வாறு செயல்பட பேண்டும் என்று சென்னை உயர்நீதியன்றம் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கழகத்தினர் ஒரு நொடியும் விதிகளை மீறிவிடக்கூடாது.

நாளைய நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நாளாகையால் அதனை எப்படி முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், பட்டாசுகளை வெடிப்பது, வெற்றி ஊர்வலம் போவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் முதல்வர், துணை முதல்வர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்