“அண்ணாமலை ஒரு ஆளே கிடையாது.!” வெளுத்து வாங்கிய சிங்கை ராமச்சந்திரன்.!
கோவை : அண்ணாமலையை அரசியலில் ஓர் ஆளாகவே மதிக்கவில்லை. அதனால் தான் அவருக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை என கோவையில் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக மற்றும் பாஜகவினர் இடையேயான வார்த்தை மோதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி அல்லது ஓர் இடைவெளி இருக்கும் என்று காத்திருந்த வேளையில் தான், இன்று இரவு அண்ணாமலை வெளிநாடு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இந்த வார்த்தை மோதல் சற்று குறையும் எனக் கூறப்படுகிறது.
இன்று வெளிநாடு செல்வதற்கு முன்பு வரை அதிமுகவினரின் கருத்துக்களுக்கு பதில் கருத்தை கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இன்று செய்திகளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,” எடப்பாடி அண்ணன் பற்றிய விமர்சனம் 100 சதவீதம் சரி. அதில், ஒரு துளி கூட நான் பின்வாங்க போவதில்லை. இதனால் என்னை தினமும் ஒரு அமைச்சர் வந்து திட்டலாம். தற்குறி என்று சொல்லலாம். என் வேலையை கொச்சைப்படுத்தலாம். ஆனால் அனுபவம் இல்லை என கூறுவதை என்னால் ஏற்க முடியாது.
நான் எல்லாத் தலைவர்களையும் மதிக்கிறேன். இவர்கள் ஆபாசமாக பேசலாம் நான் பேசினால் கோபம் வருகிறதா? 39 வயதான அண்ணாமலையை விடுங்கள், 70 வயதான எடப்பாடி பேசுவது சரியா?” என்று கடுமையாக விமர்சனம் செய்தார் அண்ணாமலை.
அண்ணாமலை கூறும் விமர்சனத்திற்கு அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன் சேத்தியாளர்களிடம் கூறுகையில், ” உலக முழுக்க எம்ஜிஆருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு வந்து நாணயம் வெளியிட்டதன் காரணமாகத்தான் இந்தியா முழுக்க எம்ஜிஆர் புகழ் பரப்பப்பட்டது என அண்ணாமலை நினைத்தால், அவர் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான் எனக் கூற வேண்டும். எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிட்டதால் மத்திய அரசுக்கு தான் பெருமை அவர் உலக புகழ் பெற்ற தலைவர் இதனை அண்ணாமலை புரிந்து கொள்ள வேண்டும். அவர் முதலமைச்சராக இருந்தபோது அண்ணாமலை பிறந்திருக்க கூட மாட்டார். அவர் கட்சி ஆரம்பித்து, அவர் இறக்கும் வரை முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர்.
அண்ணாமலைக்கு பதட்டம் இருக்கிறது. தன்னம்பிக்கையுடன் இருப்பவர் பதட்டம் அடைய மாட்டார். அண்ணாமலை பயத்தின் உளறுகிறார். அதுபோலத்தான் அவரை அவரால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை. அவர் வாயை முதலில் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் ஒரு அரசியல் கோமாளி.
பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்குமிடம் தமிழ்நாடு. அண்ணாமலையின் அப்பா அரசியலில் இருந்து இருந்தால் அவரை நாங்கள் தரைகுறைவாக பேசினால் அவர் ஏற்றுக்கொள்வாரா? முதலில் பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். இது அண்ணாமலைக்கு புரிய வேண்டும். எடப்பாடியார் பற்றி தவறாக பேசியதற்கு கோவையில் அவருக்கு எதிராக நாங்கள் ஒரு ஆர்ப்பாட்டம் கூட செய்யவே இல்லை. ஏனென்றால் அவரை நாங்கள் ஒரு ஆளாகவே மதிக்கவில்லை.
2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சியில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று எங்கள் கூட்டணியில் இருந்து கொண்டு எடப்பாடியார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரை அண்ணே அண்ணே என்று பூனை குட்டி போல் சுற்றி வந்தவர் அண்ணாமலை. இன்னைக்கு ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல பேசுகிறார். அவரது கட்சியை சேர்ந்திருந்த திருச்சி சிவாவே அவரை கிழி கிழி என்று கிழிக்கிறார்.
2019 தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி மனுத்தாக்கல் செய்ய போகும்போது எடப்பாடி பழனிச்சாமி கூப்பிட்டாராம், அப்போது எடப்பாடியார் வர மறுத்துவிட்டாராம். அதன் காரணமாகத்தான் பிஜேபி அதிமுக கூட்டணி உடைந்தது மகிழ்ச்சி என்று கூறுகிறார் அண்ணாமலை. அவர் கட்சியில் சேர்ந்தது 2020. அப்படியென்றால் 2021இல் எதற்காக எங்கள் கூட்டணியில் இருந்தீர்கள்? ஒரே மேடையில் இருந்து கொண்டு “எடப்பாடியார் போன்ற பெரிய தலைவர் இருக்கும் மேடையில் நான் இருக்கிறேன்” என்று எதற்காக அப்போது கூறினீர்கள்.
மோடி பக்தன் என்று நீங்கள் வேண்டுமானால் உங்கள் பாஜக தொண்டர்களை ஏமாற்றுவதற்காக கூறலாம். தமிழக மக்களே மோடிக்கு இடமில்லை என்று கூறிவிட்டனர். 2024 இல் ஒருவேளை கூட்டணி முறியாமல் இருந்திருந்தால் அண்ணாமலை இப்படி பேசி இருப்பாரா?” என்று கோவையில் சிங்கை ராமச்சந்திரன் பேசினார்.