ஒருநாள் முழுவதும் உயர்நீதிமன்றம் மூடப்படும் யாருக்கும் அனுமதி கிடையாது..!

Default Image

சென்னையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த உயர்நீதிமன்றத்தை சட்டத்துறை சார்ந்தவர்களும் , பொதுமக்களும் , பல்வேறு துறையை சார்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.அதனால இந்த வளாகத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை உணர்த்தும் வகையில் வருடத்திற்கு ஒருநாள் உயர்நீதிமன்றத்தை மூடுவது வழக்கம்.
பொதுமக்களுக்கு எப்போது வேண்டுமெனாலும் திறந்து இருக்கும் உயர்நீதிமன்றத்தின் ஏழு வாசல்களும் நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு முதல் ஞாயிறு இரவு 8 மணி வரை மூடப்படும்.
இது பலவருடங்களாக பின்பற்றப்படுகிறது.இதனால் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்து உள்ளது.அனைத்து வாயில்களும் மூடிய பிறகு யாரும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்