“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” – துணை முதல்வர் ஓபிஎஸ்

கொத்தடிமை முறை ஒழிப்பு நாளையொட்டி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொத்தடிமைகளாக அவதிப்படுவோரின் அடிமை விலங்கை உடைத்து, அவர்களுக்கு நல்வாழ்வு நல்குவதை உணர்த்தும் கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை இன்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் அம்மாவின் அரசு கொண்டாடி வருவதில் பெருமை அடைகிறேன்.
மேலும் யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே,நான்கு ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகுநேற்று சென்னை திரும்பிய சசிகலா குறித்து, அதிமுகசார்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள்து கருத்துக்களை தெரிவித்த நிலையில், துணை முதல்வர் மட்டும் மவுனமாக இருந்து வருகிறார்.
அதிமுகவில் அனைவரும் ஒரே கருத்துடன் தான், ஒற்றுமையுடன் தான் இருக்கிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கொத்தடிமை முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
“யாரும் யாருக்கும் அடிமை இல்லை” என்றே கொத்தடிமை முறைதனை ஒழித்து கொத்தடிமைகள் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதியேற்போம்!
— O Panneerselvam (@OfficeOfOPS) February 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025