தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க நாடுகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா மட்டுமல்லாமல் சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கான கட்டுப்பாடுகளும் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலேயே வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தற்பொழுது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்திலும் இதுவரை யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு இல்லை. வெளிநாட்டில் இருந்து வந்த 477 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் யாருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
அவ்வாறு விமான பயணிகளிடம் ஓமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதுபோல ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் ஓமைக்ரான் தொற்று இருந்தால் அதனை கண்டறிய முடியும் என அவர் கூறியுள்ளார்.
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…