அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!

புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

O. Panneerselvam

சென்னை :  அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இருந்தபோதே திட்டத்தின்  80 சதவீத பணிகள் நடைபெற்று முடிந்தது. எனவே, பிப்ரவரி 9-ஆம் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழாவும் கோவையில் நடைபெற்றது.

இந்த விழா பெரிய அளவில் பேசுபொருளாகி முடிந்துள்ளது. ஏனென்றால், நிகழ்ச்சி தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பேனர்களில்  உருவாக்கிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவர் அம்மா ஜெயலலிதா படங்கள் இல்லை. அதனால் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில் பல்வேறு முணுமுணுப்புக்கள் உருவாக தொடங்கியும் இருக்கிறது.

இந்த சூழலில், முன்னாள் முதல்வரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் “புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை” என கூறியுள்ளார். இது குறித்து பெரிய அறிக்கை ஒன்றையும், அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியீட்டு இருக்கிறார்.

அதில் ” அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு, தி.மு.க. அங்கம் வகித்த அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்புதல் அளிக்காத நிலையில், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டவர் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்கான குரல் 1957 ஆம் ஆண்டு முதல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தாலும், இந்தத் திட்டத்திற்கு விதை போட்ட பெருமை இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும்.

2015 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தபோது, தமிழ்நாடு தொடர்பான திட்டங்கள் குறித்த அறிக்கையினை மாண்புமிகு அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் வழங்கினார்கள். இந்த அறிக்கையில், 1,862 கோடி ரூபாய் மதிப்பிலான அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு நிதி உதவி கோரும் பொருளும் இடம் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, 16-02-2016 அன்று சமர்ப்பிக்கப்பட்ட 2016-2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில், அத்திக்கடவு – அவினாசித் திட்டம் இடம்பெற்றிருந்தது. அம்மா ஆணையின்படி, மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், அதே சமயத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றை, நிதி அமைச்சர் என்ற முறையில் பேரவையில் வாசிக்கும் பாக்கியத்தை எனக்கு அளித்தவர் அம்மா அவர்கள். இதனைத் தொடர்ந்து, 18-02-2016 நாளிட்ட பொதுப் பணித் துறை அரசாணை எண் 66 மூலம் அத்திக்கடவு அவினாசி திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூன்று கோடியே 27 இலட்சம் ரூபாய் நிதியை அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டது.

அம்மா அவர்களின் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் ஆளுமை காரணமாக, மாண்புமிகு அம்மா அவர்களின் பன்மொழித் திறன் காரணமாக, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாக,  அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில்  அம்மா அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து, அம்மா அவர்களின் பாதையில் நடைபெற்ற ஆட்சி,  அம்மா அவர்களின் கனவுத் திட்டமான அத்திக்கடவு – அவினாசித் திட்டத்தை நிறைவேற்றியது.  அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரிந்த நிலையில், 2017 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பது அம்மா அவர்களின் ஆட்சி.  அம்மா அவர்களின் கனவு நனவாக்கப்பட்டது அவ்வளவுதான்.

இன்றைக்கு, அத்திக்கடவு – அவினாசித் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதற்க் காரணம் மாண்புமிகு  புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான். இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

IPL2025 Sanju Samson
ShubmanGill
chiranjeevi - RAM SARAN
Bus Accident
marcus stoinis
O. Panneerselvam