என்னை ஒதுங்கியிருக்க யாரும் நிர்பந்திக்கவில்லை, நானே ஒதுங்கினேன் – சசிகலா
சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என சசிகலா தெரிவித்தாக தகவல்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்கவில்லை என அதிமுகவில் இருந்து ஒதுங்கிய சசிகலா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், என்னை விலகி இருக்கும்படி யாரும் நிர்பந்திக்க முடியாது என்றும் என்னையே வேண்டாம் என்றதால் நானே ஒதுங்கினேன் எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
அதிமுகவினர் ஒன்றாக இருந்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்து இருந்தால் வெற்றி பெற்றிருப்பார்கள். ஆனால், தனித்தனியாக நின்று தோற்றுவிட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக வீணாவதை பார்த்து கொண்டியிருக்கமாட்டேன் என்றும் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும், அதை யாராலும் மாற்ற முடியாது எனவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், தான் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிசகலா, தற்போது நாள்தோறும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களிடையே அவர் பேசும் தொலைபேசி உரையாடல்கள் அவ்வப்போது வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.