சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 127 நாடுகளில் பரவியுள்ளது. இது தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலமாக பரவி வரும் கொரோனாவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. அந்த வகையில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் நோக்கத்தில் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையனின் இல்லம் முகப்பு கேட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சாிக்கை நடவடிக்கையின் அடிப்படையில் மாா்ச் 31 ஆம் தேதி வரை தன்னை சென்னையிலும், கோபிசெட்டிபாளையம் இல்லத்திலும் யாரும் சந்திக்க வர வேண்டாம் என அறிவிப்பு பலகை வைத்துள்ளாா். இதனை பலர் விமர்சனம் செய்துவருகின்றனர், ஒரு அமைச்சர் இப்படி யாரையும் பார்க்கமாட்டேன் எனக் கூறி பதுங்குவது முறையல்ல என்றும், சென்னையில் சட்டமன்றத்திற்கு செல்லும் போது மட்டும் கொரோனா வைரஸ் பற்றி அச்சமில்லையா என்று கேள்விகள் எழுப்பப்படுகிறது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…