கூட்டணியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது” -மு.க.ஸ்டாலின்
“வலிவுடனும் பொலிவுடனும் திகழும் கழக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் இறுதியில் கலகலத்துப் போவார்கள் – கழக கூட்டணியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணியை மட்டும் குறி வைத்தே செய்திகள் வெளியிடப்படுவதும், விவாதங்களைக் கட்டமைப்பதும், மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தகைய விவாதங்கள் பொழுதுபோக்கவே பயன்படும். அதீதமான கற்பனை மற்றும் அளவில்லா ஊகத்தின் அடிப்படையில், எதையாவது சொல்லி, வலிவுடனும் பொலிவுடனும் திகழும் கழகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் கடைசியில் கலகலத்துப் போவார்கள்.
கழகக் கூட்டணியை அந்தச் சக்திகளால் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. வெற்றிக் கூட்டணியாம், கழகக் கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை; எவராலும் அதன் கவனம் சிந்தாது, சிதறாது என்று தெரிவித்துள்ளார்.
“வலிவுடனும் பொலிவுடனும் திகழும் கழக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தலாம் என எத்தனிப்பவர்கள் இறுதியில் கலகலத்துப் போவார்கள் – கழக கூட்டணியை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது”
-கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
Link: https://t.co/tC43896VWc#DMK #MKStalin pic.twitter.com/MOyZqCLi5r
— DMK (@arivalayam) October 12, 2020