நாட்டின் பொருளாதாரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது- கே.எஸ்.அழகிரி
பாஜக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கியான யெஸ் வங்கி வாரா கடன்களுக்கு அதிகமான டெபாசிட்கள் வழங்கியதால் தற்போது நிதிநெருக்கடியில் உள்ளது. இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.யெஸ் வங்கிகளை நிர்வகிக்க எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டார். பின் யெஸ் வங்கி நிறுவனர் ரானா கபூருக்கு வரும் 11-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வங்கிகளில் செய்யப்பட்ட முதலீடுகள் மக்களின் சொத்து. மக்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக வைப்புத் தொகையாக வைத்திருந்தனர். அந்த நம்பிக்கை தற்போது தகர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துகிற வகையில் பா.ஜ.க. அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? – திரு. @KS_Alagiri pic.twitter.com/E1OXLhQsmj
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 9, 2020
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், பொதுத்துறை வங்கிகள் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை வங்கிகள் மீதான நம்பிக்கையை மீட்க பாஜக அரசிடம் என்ன செயல்திட்டம் இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் .பாஜக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.